நவராத்திரி வழிபாட்டில் சந்திரகாண்டா அம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. நவராத்திரியின் மூன்றாம் நாளுக்கு உரிய துர்க்கை ரூபம் தமிழில் சந்திரகாந்தா என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் சந்திரகாண்டா என்று அழைக்கப்படுகிறது. மாதா சந்திரகாண்டா தேவியை வழிபடுவது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என்பதால், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க சந்திரகாண்டாவை வணங்கலாம். யுத்தத்தில் வெற்றி தரும் கருணை வடிவாக அம்மா சந்திரகாண்டாவை போற்றுவர். சந்திரன் என்றால் மதி அல்லது பிறை. […]