சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை ‘ஜெய்சங்கர் சாலை’ என்று மாற்றம் செய்ய அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]