தமிழக பாஜகவில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமைத்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. பாஜகவில் கூட்டணிக்கு எதிராக […]

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் நெரிசல் சம்பவம் குறித்த விசாரணையில் இருந்து விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி […]

வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் உரிமம் தொடர்பான தற்போதைய சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ல் 85,649-ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை, பழனிசாமி ஆட்சியில் 2020-21ல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல, 2011-12ல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் பழனிசாமி ஆட்சியில் ரூ.12.90 […]