அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பணி நிரவலுக்கு உட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி ஆணை பெறுமாறு வற்புறுத்தக் கூடாது. அதேபோல், வற்புறுத்தி பணிநிரவல் […]