இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பேக்கேஜிங் மீது உயிருள்ள கொரோனா வைரஸைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதை சீனாவின் சுகாதார ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குளிர்ந்த சங்கிலி உணவின் வெளிப்புற பேக்கேஜிங்கில் இருந்து, வாழும் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்படுவது உலகில் இதுவே முதல் முறையாகும் என்று’ தெரிவித்துள்ளது. துறைமுக நகரமான கிங்டாவோவில், “ சமீபத்தில் புதிய கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தன. […]
coronavirus china
நிரூபிக்கப்படாத தடுப்பூசிகளை சீனா அந்நாட்டு மக்களுக்கு வழங்கி வருவதாக நியூயர்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் சாராம்சம் இதுதான்.. உலகில் இன்னும் நிரூபிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாகவில்லை, ஆனால் இது சீன அதிகாரிகள் பாரம்பரிய சோதனை செயல்முறைக்கு வெளியே உள்ள பல்லாயிரக்கணக்கானவர்களை, ஆனால் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி போட முயற்சிப்பதை நிறுத்தவில்லை. சீனாவில் தற்போது 3 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதனை அரசாங்கம் அத்தியாவசியமானது என்று கருதுவதால், மருந்து நிறுவனங்களின் […]
இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 2003 பேர் பலியானதால் கொரோனா பலி எண்ணிக்கை 11,903-ஆக அதிகரித்துள்ள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. […]
கொரோனா பாதிப்பில் 1 லட்சத்தை கடந்த முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தாலும் கூட நோய்த் தொற்று குறைந்த பாடில்லை. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 9,000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]
இந்தியாவில் தொடர்ந்து 7-வது நாளாக 9,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.66 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 9,987 […]
தமிழகத்தில் இன்றும் புதிய உச்சமாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,46,628-ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயாக மாறி உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை சுமார் […]
கொரோனா பாதிப்பில் இத்தாலியை மிஞ்சி, தற்போது உலகளவில் இந்தியா 6-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜனவரி 30-ம் தேதி கேரளாவில் முதல் கொரோனா பாதிப்பு உறுதியானது மூலம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. அதன்பிறகு மார்ச் மாதத்தில் தொற்று எண்ணிக்கை 1000ஐ தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு கடந்த மே 18-ம் தேதி 1 லட்சத்தை கடந்தது. அதன்பிறகு நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியதால் […]
தமிழகத்தில் இன்று 1,200 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.000-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சில நாட்களாகவே, தினமும் சராசரியாக 700-க்கும் மேற்பட்டோருக்கு […]
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற, 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே அடுத்த உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்ததற்கு பின் அப்பெண்ணிற்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அப்பெண்ணின் இறுதிச்சடங்கில் தடையை மீறி 70 பேர் வரை பங்கேற்றுள்ளனர். மே 25ம் தேதி பெண்ணின் உடலை வெளியே எடுக்க […]