மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 25 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrif) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா (Srisan Pharma) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் […]

