fbpx

தலைநகர் டெல்லியில் 200 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா நிலைமையை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருகிறது. மேலும் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி மர்லேனா தெரிவித்துள்ளார். …

ஏப்ரல் 10, 11 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும்.

அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாடினார். கொரோனாவின் முந்தைய பரவலின்போது செயல்பட்டது போல், தற்போதும் கொரோனா …

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் பகிருமாறு அப்போது அவர் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். கொரோனா …

சீனா மற்றும் பிற நாடுகளில் கோவிட்-19 வழக்குகள் வேகமாக அதிகரித்து வருவதால், இந்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. நாட்டில் வைரஸ் பரவுவது இன்னும் அதிகரிக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது , நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கவும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை …

உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை‌ மேற்கொண்டார். உருமாறிய கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா …

சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசில் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வழக்குகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர், மாநிலத்தில் அரசு புதிய கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்து வருகின்றன. சீனாவில் மக்கள் …

எதிர்வரும் நாட்களில் சீனாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் பரவி வரும் பல காணொளிகள் மற்றும் படங்கள், நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் இறந்த உடல்களின் குவியலைக் காட்டியுள்ளன. கொரோனா தொடர்பான இறப்புகளைப் புகாரளிப்பதை சீனா நிறுத்திய நேரத்தில் இந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா டூ தமிழ்நாடு..! தீவிரமாக பரவும் கொரோனா திரிபு..! மருத்துவர்கள் எச்சரிக்கை

தி ஸ்ட்ரெய்ட்ஸ் …

கொரோனா பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபம் நபர்களுக்கு கொரோனா அறிகுறிகளான இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சுவை இல்லாமை, மூச்சு விடுவதில் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,912 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 38 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,719 …

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் …