கேரள முன்னாள் உள்துறை அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் உள்துறை அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான பாலகிருஷ்ணன் 2015 முதல் 2022 வரை மார்க்சிஸ்ட் […]