fbpx

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முடிந்தவுடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிசிசிஐ-யிடம் ரோஹித் சர்மா பேசி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ரோகித் ஓய்வு அறிவிப்பார் என்றும், ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த …

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளராக இருந்த வருண் ஆரோன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்து இருக்கிறார். அவருக்கு வயது 35. தற்போது நடைபெற்று வரும் 2024-25 விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் ஜார்கண்ட் அணிக்காக ஆடினார். அத்துடன் தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ள அவர் முடிவு செய்து இருக்கிறார்.

வேகப் பந்துவீச்சாளராக இருப்பதால் …

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளராக இடம்பெற்று வந்த யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனஸ்ரீ சாஹலிடம் இருந்து எவ்வளவு ஜீவனாம்சம் பெறுவார் என்ற கேள்வி தற்போது பலருக்கும் எழுந்துள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் சாஹல் மற்றும் தனஸ்ரீ திருமண உறவில் இருந்து …

என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது என ஆஸ்திரேலிய செய்தியாளர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் …

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரிக்கெட் சாம்பியன் கிரேட் டுவைன் பிராவோ, இடுப்பு காயம் காரணமாக அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் 41 வயதை எட்டவுள்ள பிராவோ, இதுவரை 582 போட்டிகளில் விளையாடி 631 விக்கெட்டுகள் மற்றும் 6970 ரன்களை எடுத்துள்ளார்.

இதுகுறித்து, டுவைன் பிராவோ வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “கிரிக்கெட் …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே எல் ராகுல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமானாலும், தற்போது மிடில் ஆர்டர் வரிசைக்கு பின்தள்ளப் பட்டுள்ளார் கே எல் ராகுல். அதிலும் டி 20 போட்டிகளில் அவர் அணியில் எடுக்கப்படுவதே இல்லை. சமீபத்தில் …

T20 world cup 2024: 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.…

ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய டி20 அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படாத நிலையில், சமூக வலைதளத்தில் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு இந்திய வீரர்கள் பயணிக்க …

இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர், கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம். அதேபோல, இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கால்பந்து வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு வீரர் …