பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய நேரத்தில் காப்பீட்டுத் தொகை அளிக்கப்படுவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து மகசூல் செய்யப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்கள் கிடைத்த 21 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீட்டுத்தொகை செலுத்தப்படுகிறது. கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் 2024-25-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மொத்தம்  1,69,61,521 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.2,417.43 கோடி உரிமை கோரல்கள் கணக்கிடப்பட்டதாகவும் […]

ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் M/s.சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (Kshema General Insurance Limited) நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. […]

ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: சேலம் மாவட்டத்தில், ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை […]

நடப்பு காரிப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும். நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025 காரிப் பருவத்தில் வெண்டை, வெங்காயம் தக்காளி ஆகிய பயிர்களுக்கு 1.9.2025 வரை விவசாயிகள் […]