திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணத்தை தொடர்ந்து காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். […]