மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்ட மருத்துவமனையில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு நகராட்சி குப்பை வாகனத்தில் சடலம் கொண்டு செல்லப்படுவதை அதில் பார்க்க முடிகிறது.. குத்லா காவல் நிலையப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு அடையாளம் காணப்படாத இந்த உடல், தகனத்திற்காக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. முறையான சவ வாகனம் அல்லது ஆம்புலன்ஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இரும்பு கம்பியால் இழுத்துச் செல்லப்பட்டு குப்பை வண்டியில் ஏற்றப்பட்டது. […]