டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) வெள்ளிக்கிழமை காலை 150க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ன கோளாறு? அதிகாரிகள் கூறுகையில், “Automatic Message Switching System (AMSS)” எனப்படும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம். இது, விமான புறப்பாடு தொடர்பான முக்கிய தரவுகளை “Auto […]

