நெல்லையப்பர் கோயிலில் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் சுவடி உட்பட 13 அரிய சுவடிகளை இந்து சமய அறநிலையத் துறையின் ஓலைச் சுவடிகள் நூலாக்க திட்டப் பணிக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள 42,020 கோயில்களில் உள்ள அரிய ஓலைச் சுவடிகளை திரட்டி புதுப்பிக்கும் பணிக்காக ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணி எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக சென்னை உலகத் தமிழாராய்ச்சி […]