கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை விக்னேஷ்வரன் என்பவர், பணியிலிருந்த மருத்துவர் பாலாஜி என்பவரைக் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ்வரனை போலீஸார் கைதுசெய்து தற்போது விசாரணை நடத்திவருகின்றனர். அதேசமயம், மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்றும் தி.மு.க அரசு மீது விமர்சனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன.…