வயது சான்றிதழ் இல்லாத பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து வயது சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்வாரியத்தில் தற்போது பணியில் இருப்பவர்களில் சிலர் முறையான வயது சான்றிதழ் சமர்ப்பிக்காமல் பணியில் சேர்ந்துள்ளதாகவும், அந்த பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவில்; அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் அரசு […]
eb
அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளித்து மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளித்து மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு சுழலி மின் நிலையங்கள் போன்ற எரிசக்தி ஆதாரங்கள் வாயிலாகவும், சூரிய சக்தி, காற்றாலை போன்ற மரபுசாரா ஆற்றல் வாயிலாகவும் மின் உற்பத்தி செய்து […]
மின் பகிர்மான கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, அந்த சம்பளத்துக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும். […]
மழை காலத்தில் தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும் என மின்வாரியம் கூறியுள்ளது. மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில்; ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம், வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது, ஈரப்பதமான சுவர்களில் கை வைக்க கூடாது. […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய கழகங்களுக்கிடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றத்து. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் பருவ மழைக்கால முன்னேற்பாடுகள், பணியாளர் தேவை மற்றும் மனிதவள செயல்முறைகள், சட்ட விவகாரங்கள், நுகர்வோர் சேவை மற்றும் குறைதீர் வழிமுறைகள், அறிவிப்புகள், திட்டங்கள் […]
வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறையை தமிழ்நாடு மின்உற்பத்திக் கழகம் கொண்டு வந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிக பிரிவு தலைமைப் பொறியாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இந்தப் பணிகளை வேகப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற […]
சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கே.கே.நகர் கோட்டத்தில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய பகுதிகள், தாம்பரம் கோட்டத்தில் செம்பாக்கம், சேலையூர், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் […]
காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது. மின்வாரியத்தில் தற்போது பணியில் உள்ள காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் மொழி தேர்வு சான்றிதழ் இல்லாமல் பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மின்பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களின் தகவல்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து முதன்மை பொறியாளர்கள் மற்றும் […]
நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், “தொகையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்டவற்றில் வாரியம் மீண்டும் மீண்டும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறது. அவமதிப்பு என்ற நிலை வந்த பிறகே உத்தரவுகளை செயல்படுத்துவதையும், அதன் பிறகும் உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கேட்பதையும் ஏற்க முடியாது. இதுபோன்றவற்றை விரைந்து சரி […]

