சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தின் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் நேபாளத்தின் ஹோட்டல் துறை பேரிழப்பை சந்தித்துள்ளது.. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் சமீபத்தில் மாணவர்கள் தலைமையிலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது சூறையாடப்பட்டு அல்லது தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.. இதனால் நேபாளத்தின் ஹோட்டல் துறை, ரூ.25 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளதாக வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள ஹில்டன் ஹோட்டல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.. […]

