நாங்க யாருடன் வேணும்னாலும் கூட்டணி வைப்போம் என்றும் ஸ்டாலின் ஏன் நடுங்குகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த […]

பாஜகவின் டப்பிங் வாய்ஸில் பேசிய பழனிசாமி, தற்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸில் பேசுகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் ரூ.846 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் நீட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். திருவாரூர் என்றாலே, தேரும், கலைஞரும் தான் நினைவுக்கு வரும்.. தமிழ்நாட்டில் […]

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் மரணம் ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், […]

உட்கட்சி, கூட்டணி பிரச்சனைகளையும் மறைப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டு தனமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சையில் அரசு சார்பில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார். மேலும் “ தஞ்சை மக்களுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. தஞ்சை மண்ணில் ஒவ்வொரு […]

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று மாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் ஆகிய இடங்களிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்த […]