10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல், தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என தேர்வுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை […]

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்கான திறன் இயக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழி மற்றும் கணிதப் பாடத்தின் கற்றலை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ […]

தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும்.அதன்படி நடப்பாண்டு 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் […]

சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் படிப்புக்கு மொத்தம் 260 இடங்கள் வரை உள்ளது. சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக் கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. […]

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று […]

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட […]

காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து நிதி வழங்கப்படும். இந்த பள்ளிகள் மாணவர்களை அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்ததுடன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சிறப்பாக இருக்க வேண்டும். கலை, […]

அரசுப் பள்ளிகளில் ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்ரவரி 4, 5, 6-ம் […]

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பணி நிரவலுக்கு உட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி ஆணை பெறுமாறு வற்புறுத்தக் கூடாது. அதேபோல், வற்புறுத்தி பணிநிரவல் […]

தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் களப்பணி மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியில் சேரும் அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில […]