பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு […]

தமிழகத்தில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 4 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்தவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்: ‘தொலைதூர கிராமங்கள், மலைப் பகுதிகள், புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே உள்ள 4 தொடக்கப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்’ என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இதையடுத்து,இதற்கான கட்டமைப்பு […]

இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய புதிய பாடத்திட்ட வடிவமைப்புக்கான உயர்மட்ட மற்றும் வல்லுநர் குழுக்களை பள்ளிக் கல்வித் துறை நியமனம் செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்; மாநிலக் கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றியமைப்பட உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க பாட நிபுணர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட வடிவமைப்பு […]

2026-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். மே.8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும். மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெறும். 11-ம் வகுப்பில் தவறிய […]

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் நன்கொடை வசூலிக்க ஆசிரியர்கள், அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் தறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டம், நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8-ன்கீழ் தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டதாகும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பங்களிக்க விரும்பும் […]

நாடு முழுவதும் பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடம் அறிமுகம் செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (கம்ப்யூட்டேஷனல் திங்கிங்-சிடி) தொடர்பான பாடத்தை அறிமுகப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஏஐ மற்றும் சிடி பாடங்களை பள்ளிகளில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஆராய,சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையிலான நிபுணர்கள் […]

நடப்பாண்டு தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ ஒதுக்கீட்டில் 70,449 குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை செயலர் தெரிவித்துள்ளார். இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இதன்படி, தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்திருந்தது. […]

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் தகவல்களை துரிதமாக வழங்குவதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”பள்ளிக் கல்வித்துறையில் உள்ள முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது இந்த அலுவலர்களுக்கு […]

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக, உடற்கல்வி இயக்குநர் நிலை-2 நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. 2025 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து […]

தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைந்து வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. தமிழகத்தில் இலவச சைக்கிள் திட்டம் கடந்த 2001-2002-ஆம் கல்வியாண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இது பின்னர் அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2025-26 கல்வியாண்டிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச சைக்கிள் திட்டம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]