அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றலின்றி பயில ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்து, விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் வரும் 10-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், […]

கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல்- விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில்: கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர்- கிரேடு 2 (Livestock Inspector) நேரடி நியமனமும் பதவி உயர்வும் […]