பீகார் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், 2025 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறவிருப்பதை அடுத்து பீகார் முழுவதும் 824 பறக்கும் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 2025 நவம்பர் 03 அன்று, பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் […]
election commission
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டுள்ளது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, […]
அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் ஸ்டாலின், தற்போது மட்டும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம். பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2026 பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 77,000 அதிகாரிகள் பணிபுரிவர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. […]
வாக்காளர்கள் 1950 என்ற உதவி எண்ணை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான கேள்விகள் / குறைகளுக்கு தீர்வு காணலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களின் தேர்தல் தொடர்பான அனைத்துவிதமான கேள்விகள் / குறைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் 36 மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு தேசிய வாக்காளர் உதவி எண்ணை தேர்தல் ஆணையம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உதவி தொலைபேசி எண்களை தேசிய […]
தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்ய இருப்பதால், அந்தப் பணிகளை மாவட்ட பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “2026 ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. முறையான வாக்காளர் பட்டியல் […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது 2-வது கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR )12 மாநிலங்களில் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.. நடைமுறையின் கீழ் வரும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியலில் இந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.. அரசியல் கட்சிகள் பட்டியல்களின் தரம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி வருவதால், ஒவ்வொரு தேர்தலுக்கும் […]
பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், இடைத்தேர்தல்களையும் அறிவித்தது. பீகார் தேர்தல்களில் வாக்குப்பதிவு முறையே நவம்பர் 6, 2025 மற்றும் நவம்பர் 11, 2025 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126 (1)(b), அந்த வாக்குச் சாவடியில் எந்தவொரு தேர்தலுக்கும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு […]
Is TVK going to contest the 2026 elections with this symbol? Vijay who ticked it! Volunteers are happy..
பீகாரில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை பின்பற்றி 2026 தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் நடத்திய 2 நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நிறைவடைந்தது. டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் வாக்காளர் பட்டியல் மேலாண்மை நிறுவன வளாகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற […]

