புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரத்தில் தீப்பிடித்ததால் ஏர் இந்திய விமானம் டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். டெல்லியில் இருந்து இந்தூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI2913 புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லிக்குத் திரும்பியது. விமானத்தின் காக்பிட் குழுவினருக்கு வலதுபுற எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாக ஒரு சமிக்ஞை கிடைத்தது, அதன் பிறகு நிலையான நடைமுறையின்படி இயந்திரம் நிறுத்தப்பட்டு விமானம் உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக […]