வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நிரப்பும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in -ல் எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை […]

