கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து 72 மணி நேரத்திற்குள், இந்தியா அமெரிக்காவிடம் உறுதியான ஆதாரங்களை ஒப்படைத்தது, இது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF), அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு வழிவகுத்தது. நியூஸ்18 அறிக்கையின்படி, இந்தியா அமெரிக்காவிடம் ஒப்படைத்த உளவுத்துறை மற்றும் தொழில்நுட்பத் தரவுகள் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உயர் தரங்களை பூர்த்தி செய்தன. […]