பள்ளிக்கல்வியின் செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆராய்வதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில்; துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 4-வது வார இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க […]
exam
அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையான […]
இன்று நடைபெறும் ஊரக திறனாய்வுத் தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது ஆணையம். ஊரக திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது, முதன்மை மற்றும் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த […]
இன்று நடக்கவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு. இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் ‘டித்வா’ புயல் நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு வரை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் இயக்கம் கடந்த ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக தேர்வான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு காலாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளின்படி அடிப்படை கற்றல் விளைவுகள் […]
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு […]
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் […]
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை […]
தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் […]
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜனவரி 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. இதில் முதன்மைத் தேர்வு, தேசிய தேர்வுகள் […]

