சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு, அரசுத்துறை ஆவணங்களை போலியாக தயார் செய்ததாகவும், நிலம் குறித்த ஆவணங்களை பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் வட்டாட்சியர் ராஜசேகர் புகார் வழங்கியுள்ளார். இந்த புகாரினடிப்படையில் அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரை சார்ந்த வின்சென்ட்(85), அம்பத்தூர் சோளம்மேடு பகுதியைச் சார்ந்த பினு(41) உள்ளிட்ட 2 பேரையும் போலி ஆவணங்களை தயார் செய்தபோது கையும், களவுமாக காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் […]