சேலம் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம் தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெண்டை, வெங்காயம், தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் போன்ற வீரிய ஒட்டுரக காய்கறிகளின் பரப்பை அதிகரிக்க 125 எக்டர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்த இலக்கு பெறப்பட்டுள்ளது. […]