திருமணமான பெண் அரசு பணியாளர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதிகாண் பருவத்திலும் கணக்கில் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பான முக்கிய மாற்றத்தை அரசு இன்று அறிவித்துள்ளது. திருமணமான பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு, இப்போது தகுதிகாண் பருவத்திலும் (Probation Period) சேவைக்காலமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய […]