இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 31 மீனவர்கள் அக்டோபர் 31-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் […]

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மதியம் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய […]