நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளைப் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 குடியிருப்புகளைக் கொண்ட வகை-VII பல மாடி அடுக்குமாடி குடியிருப்பை, புது தில்லியில் உள்ள பாபா கரக் சிங் (பி.கே.எஸ்) மார்க்கில், இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் குடியிருப்பு வளாகத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூரும் வகையில் மரக்கன்று ஒன்றை நடவுள்ளார். […]