வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி உடல்நலக்குறைவால் காலமானார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில், கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.தண்டபாணி (75). இவர், கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று உயிரிழந்தார். இவர்,காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல் பயணத்தை துவக்கினார். …