வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 7-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதத்திலும், சோனியா காந்தி இதேபோன்ற வயிற்றுப் பிரச்சினைக்காக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]