சேலம் மாவட்டத்தில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் அவர்களின் 2025-2026 ஆம் ஆண்டு செயல்திட்டத்தில், சேலம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேட்டூர் அரசுக்கலைக்கல்லூரி, சேலம் […]