வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அதில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், மூன்று மாநிலங்களின் சந்திப்பாக திகழும் முக்கிய பகுதி. இங்கிருந்து மைசூர் நோக்கி ஒரு தேசிய நெடுஞ்சாலையும், வயநாடு, மலப்புறம் நோக்கி மாநில நெடுஞ்சாலைகளும் செல்கின்றன. இதனால் கூடலூர் பகுதியில் இரவு பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு […]