செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாக இருந்தாலும், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சைபர் கிரைம் மோசடிகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஒருவரின் குரலை அவருக்கே தெரியாமல் குளோனிங் செய்யும் தொழில்நுட்பம் மூலம் நடக்கும் நிதி மோசடிகள் இப்போது உச்சத்தில் உள்ளன. சமீபத்தில், ஹைதராபாத்தில் உள்ள 72 வயதான பாட்டி ஒருவர், இது போன்ற மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

