fbpx

சென்னை காரப்பாக்கம் பகுதியில் பாஜகவின் கையெழுத்து இயக்கத்தில், அரசுப் பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த விவகாரத்தில் பாஜகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்மொழிகளைக் கற்றுக் கொடுக்கக் கோரும் தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கம், நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி தேசிய கல்விக்கொள்கைக்கு பாஜகவினர் ஆதரவு திரட்ட்டி வருகின்றனர். அதே …

Dharmendra Pradhan: ”தேசிய கல்வி கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,” என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி கொள்கை வாயிலாக தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக, ஆளும் தி.மு.க., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் …

கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும் கும்பல், அப்படியே அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் வருமான வரி அலுவலகத்திற்கும் செல்லுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, இந்தித் திணிப்பு என்று கூறி, சில நபர்கள், இந்தி எழுத்துக்களை …

இந்தி திணிப்பு எதிர்ப்பை வலியுறுத்தி தமிழகத்தில் திமுக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழ்நாடு மட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன்? தமிழக அரசு புதிய …

ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்றும் வகையில், அந்த மொழியின் தூதர்களாக இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறியுள்ளார்.

சென்னையிலுள்ள தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையின் 83-வது பட்டமளிப்பு விழா அங்குள்ள மகாத்மா காந்தி பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய …

சமூகநலத்துறையின் பெண்களுக்கான கட்டுப்பாட்டு மைய பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அவ்விளம்பரம் நீக்கப்பட்டு தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக …

ஆர் எஸ் எஸ் ரவி அவர்களே, உங்கள் சித்தாந்தத்தை எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள், செருப்பை கழட்டி அடிப்பாங்க என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ‘ஹிந்தி மாத’ கொண்டாட்ட விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். விழாவின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் …

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மத்தை கக்குகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது அறிக்கையில்; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மீது வன்மத்தை கக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய அரசு இந்தியை திணிப்பதாக …

மத்திய உள்துறை துறையின் கீழ் வரும் அனைத்து கோப்புகளும் இனி இந்தி மொழியில் மட்டுமே இடம்பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

14 செப்டம்பர் 2024 அன்று, இந்தி மத்திய அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தி தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. அலுவல் மொழியின் வைர விழா என்று அழைக்கப்படும் …