வீட்டில் வெந்நீர் கொட்டிய குழந்தை மருத்துவமனைக்குச் சென்றபோது சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சார்ந்தவர் மணிமாறன். இவரது மகனுக்கு வருகின்ற திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருப்பதால் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து உறவினர்கள் குன்னூர் வந்திருந்தனர். இவரது வீட்டில் நேற்று ஹீட்டரின் மூலம் வெந்நீர் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது விளையாடிக் […]