திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்காரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 2025 – ம் ஆண்டு மே 19 அன்று, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் […]