fbpx

அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிலீவ்லேண்ட் பகுதியில் தெலுங்கு மாணவர் உமா சத்ய சாய் கட்டே என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக முகமது அப்துல் அர்பத் காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுத்துள்ளனர். இவரோடு சேர்ந்து அமெரிக்காவில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்தே இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் …

பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் பலியான நக்சலைட் எண்ணிக்கை 13 ஆக உயர்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், துணை ராணுவப் படையினர், காவல் துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்,இப்பகுதியிலுள்ள கங்களூர் காவல் …

இந்தியாவை விட சீனாவுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை விட …

ராஜஸ்தானில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகள் அணிய கூடாது என போக்குவரத்துத் துறை துணை ஆணையம் மணீஷ் அரோரா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் தலைமை செயலர் அலுவலகத்தில் மணீஷ் அரோரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணி செய்யும் ஊழியர் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்திருந்தனர். அதனை தொடர்ந்து, …

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் …

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் நக்சலைட் எனக் கூறப்படும் மாவோயிஸ்ட் பொதுவுடமைக் குழுவைச் சார்ந்த 8 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இது குறித்து பஸ்தர் பகுதி ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், “கங்காலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லேந்த்ரா கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, …

நாடு முழுவதும் விஸ்தாரா விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்கள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், விஸ்தாரா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை சமர்பிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்து விமானங்களை திடீரென ரத்து செய்வது, குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களை இயக்காதது என்று விஸ்தாரா விமானங்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்த பயணிகள் …

கடந்த 10 ஆண்டுகளில் நிலக்கரி லிக்னைட் உற்பத்தி 70% அதிகரித்துள்ள நிலையில், நிலக்கரித்துறையின் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியில் 1 பில்லியன் டன்களை கடந்துள்ளது வரலாற்றில் ஒரு மைல்கல் என தெரிவித்துள்ளார்.

மேலும், இது துடிப்பான நிலக்கரித் துறையை உறுதி …

 உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்குடன் இந்தியா இன்று சர்வதேச வளர்ச்சியின் இயந்திரமாக மாறி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிரதமர் மோடி ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் …

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஊர்கள், மலைகளுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் இவ்விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு …