திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றியதாக ஆர்சிபி பௌலர் யாஷ் தயாள் மீது அவரது முன்னாள் காதலில் புகார் அளித்திருந்த நிலையில், இருவருடனான இன்ஸ்டா சாட்டிங் ஸ்கீரின்ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது, உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி புகார் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். […]