மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இஸ்ரேல் ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், இந்த முடிவு தனியாக அவர் எடுக்கும் ஒன்று அல்ல என்றும், பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து “பரஸ்பரமாக” எடுக்கப்படும் முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தானும், நெதன்யாகுவும் இல்லையெனில் ஈரான் இஸ்ரேலை முழுமையாக அழித்திருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் பேசிய டிரம்ப், ஈரான் இஸ்ரேலையும் […]
iran israel war
ரஷ்யா ஈரானுக்கு மிகவும் முக்கியமான உளவுத் தகவல்களை வழங்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன… மத்திய கிழக்கில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ சொத்துகள், குறிப்பாக போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் முக்கியமான ராணுவ வளங்களை கண்டறிந்து தாக்குவதற்கு ஈரானுக்கு உதவக்கூடும் என கூறப்படுகிறது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை நன்கு அறிந்த அந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் AP செய்தி நிறுவனத்திடம் பேசினர். அவர்கள் கூறுகையில், […]
கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதில் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் […]
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் பின்னணியில், வெளிநாட்டு கொடிகள் ஏந்திய கப்பல்களில் பணியாற்றிய குறைந்தது மூன்று இந்திய கடற்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார் என்று இந்தியாவின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து, முக்கிய வர்த்தக கடற்பாதைகள் பாதிக்கப்படக் கூடிய சூழலில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தப் பகுதியில் இந்திய கடற்பணியாளர்கள் தொடர்பாக 4 […]
ஈரானின் ஷஹேத்-136 ட்ரோன்கள், சவுதி அரேபியா நாட்டில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சவூதி அராம்கோ நிறுவனம் தனது ராஸ் தனுரா சுத்திகரிப்பு (Ras Tanura Refinery) நிலையத்தில் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தீ மிகக் குறுகிய அளவில் இருந்ததாகவும், விரைவாக கட்டுக்குள் […]
இந்தியா முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை பிப்ரவரி 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில், “ஈரானுக்கு ஆதரவான தீவிரவாத போக்குடைய மதபோதகர்கள் தூண்டுதல் உரைகள் நிகழ்த்துகிறார்களா” என்பதை கண்டறிந்து, மாநில அரசுகளும் பாதுகாப்பு அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய […]
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூர் இன்று சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானில் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பாக்பூர், முன்னாள் தளபதி ஹுசேன் சலாமி கொல்லப்பட்ட பின்னர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் சுமார் 260 நாட்கள் ஐஆர்ஜிசி தளபதியாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம், முகமது பாக்பூர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை “எந்தவித தவறான […]
அமெரிக்கா, ஈரானில் “பெரும் போர்செயல்களை” தொடங்கியுள்ளதாக டொனால் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில், குறிப்பாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அலுவலகங்கள் அருகே பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த தாக்குதலை இஸ்ரேல் “முன்னெச்சரிக்கை தாக்குதல்” என்று விளக்கம் அளித்துள்ளது… ஈரான் மக்களுக்கு டிரம்ப் நேரடி அழைப்பு ஈரான் […]
அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடியை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈரானின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று அமெரிக்காவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட, அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளின் நோக்கத்தை விரிவுபடுத்தியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். ஈரானின் மத்திய இராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி, அமெரிக்கா தனது நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார். […]
Israel has announced that one of Iran’s military commanders, Saeed Issadi, has been killed.

