இந்தோனேசியா 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் பல பிரபலமான சமூக ஊடக தளங்களில் கணக்கு வைத்திருக்க முடியாத வகையில் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறையை அந்த நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகாரங்களுக்கான அமைச்சர் மியூட்டியா ஹபித் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு அமல்படுத்தினார். அமைச்சர் இதுகுறித்து பேசிய போது “ இளம் வயது பயனாளர்களை டிஜிட்டல் தளங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. […]

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மசூதியில் இன்று தொழுகை நடைபெறும் போது அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சுமார் 54 பேர், பெரும்பாலும் மாணவர்கள், காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சிறிய அளவு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மசூதியில் தொடர் வெடிப்புகள் ஜகார்த்தாவின் கேலபா காடிங் பகுதியில் உள்ள கடற்படை வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியான SMA 27 மசூதியில் […]