ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்திற்குள் பறிமுதல் செய்து சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடித்ததில் 7 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்துள்ளனர். NDTV செய்தியின்படி, கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் காவல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த போலீசார் மற்றும் தடயவியல் குழு அதிகாரிகள் என்று அறிக்கை கூறுகிறது. காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீநகர் […]