ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகிலுள்ள நவ்காம் பகுதி காவல் நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தற்செயல் வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஹரியானாவின் பாரிதாபாதில் பறிமுதல் செய்யப்பட்ட ‘வைட் காலர்’ பயங்கரவாத நெட்வொர்க் வழக்கில் பெருமளவு வெடி மருந்து குவியலில் இருந்து மாதிரிகளை எடுக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் […]

