திருமாலின் 108 திவ்ய தேசங்களில் முக்கிய இடம் வகிக்கும் உலகளந்த பெருமாள் கோவில், தனிச்சிறப்புகளால் பக்தர்களை ஈர்த்துவருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள இந்த தலம் 47வது திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்குள்ளாகவே நான்கு திவ்ய தேசங்கள் திருக்காரகம், திருப்பாடகம், திருஊரகம் மற்றும் திருநீரகம் ஆகியவை அமைந்துள்ளன என்பது இதன் முக்கிய தனிச்சிறப்பாகும். இது, 108 திவ்ய தேசங்களில் வேறெங்கும் காண முடியாத அமைப்பாகும். இக்கோவிலில் வீற்றிருக்கும் மூலவர் உலகளந்த பெருமாள், […]