தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று இரவு கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றினார். விஜய் வருகையை நோக்கி பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தின் போது கட்டுப்பாடுகள் இல்லாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. விழாவின் நடுவே, ஒரு பெண் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நிகழ்ச்சி முடிந்து விஜய் வெளியேறியதும்,கூடியிருந்த மக்கள் கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். […]