பாகிஸ்தானில் மீட்புப் பணியின் போது MI-17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு பாகிஸ்தானில் மீட்புப் பணியை மேற்கொண்ட ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பணியாளர்கள் உயிரிழந்தனர்.. கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் அலி அமின் கந்தாபூர் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.. மோசமான வானிலை காரணமாக மொஹ்மண்ட் மாவட்டத்தின் பாண்டியாலி பகுதியில் விபத்து ஏற்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். […]