ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த 2 குழந்தைகள் பலியான நிலையில், மருந்து பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அதை உட்கொண்ட மருத்துவரும் மயக்கமடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் அரசாங்கத்திற்காக கேசன் பார்மா என்ற நிறுவனத்தால் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபுரோமைடு என்ற சேர்மம் கொண்ட இருமல் சிரப் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது நிதீஷுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் […]