தமிழ்நாட்டில் எண்ணற்ற சிவாலயங்கள் இருப்பினும், ஒரு மலையின் உச்சியை நோக்கிப் பயணித்து ஈசனை தரிசிப்பதில் கிடைக்கும் பரவசமே தனித்துவமானது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் அமைந்துள்ள ‘கொண்டரங்கி மலை’ ஆன்மிகப் பயணிகளுக்கும், மலையேற்ற விரும்பிகளுக்கும் ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,825 அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலை, தூரத்திலிருந்து பார்க்கும்போது பிரம்மாண்டமான சிவலிங்கம் போன்றே காட்சியளிப்பது இயற்கை தந்த அதிசயம். […]

